தனுஷ் நடித்த ‘ஓம்’ படம் நவ.20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள படம் ‘ஓம்’. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் மற்றும் நசீருதீன் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாய் அபியங்கர் படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரின் இசையில் வெளியான ‘அலாக்கா லோவா’ என்ற முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான வீழா வீரா இன்று வெளியாகி உள்ளது. இப்படம் நவ.20ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















