வெங்கடேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்த “ஆதர்ஷ குடும்பம்” அக்டோபர் 30-ந்தேதி வெளியாகவுள்ளது. வெங்கடேஷ் நடிப்பில், இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதர்ஷ குடும்பம்’. குடும்பக் கதையுடன் நகைச்சுவை மற்றும் அதிரடி அம்சங்களும் கலந்து உருவாகியுள்ள இப்படத்தில், வெங்கடேஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இவர் ஸ்வர்ணா என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும், நாரா ரோஹித், நிவேதா பெத்துராஜ், ராவ் ரமேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரம் யுவினா பார்த்தவியும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளார். இப்படத்தில் யுவினா பார்த்தவி பேசும், “அப்பா… நான் ஒரு பையனைக் காதலிக்கிறேன்!” என்ற வசனம் இடம்பெற்ற வீடியோ அண்மையில் இணையத்தில் வெளியானது. மேலும், ‘சிட்டிபாபு – சிட்டிதல்லி’ தொடர்பான வீடியோக்களும் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. இப்படம் அக்டோபர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















