திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஓம்’ படத்தின் காணொளி வெளியாகியுள்ளது. அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வரும் தனுஷின் 55 படத்திற்கு ‘ஓம்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த ஆக்ஷன் திரைப்படத்தில், ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவும் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தனுஷின் பிறந்தநாளையொட்டி ‘ஓம்’ படத்தின்‘அலாக்கா லோவா’ என பெயரிடப்பட்ட முதல் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. மம்முட்டியின் 75வது பிறந்த நாளையொட்டி ‘ஓம்’ திரைப்படத்தின் துணுக்கு காணொளியை படக்குழு வெளியிட்டது. ‘ஓம்’ படம் நவம்பர் 20ம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்தது. இந்நிலையில், தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’ வெளியானது. திப்புவுடன் இணைந்து சாய் அபயங்கர் இப்பாடலை பாடியுள்ளார். இந்த நிலையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு காணொளியை படக்குழு வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
















