மதுமிதா இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‘ஜான் டோ’ திரைப்படத்தின் பதாகை வெளியானது. அர்ஜுன் தாஸ் – மதுமிதா இணையும் புதிய படத்திற்கு ‘ஜான் டோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஒரு விறுவிறுப்பான கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சஞ்சனா நடராஜன் மற்றும் சிருஷ்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படத்தை ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாத் தேவினேனி மற்றும் சோபு யார்லகட்டா தயாரிக்கின்றனர். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் மதுமிதா, நிக்கோலஸ் செவாலியருடன் இணைந்து எழுதியுள்ளார். படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைக்க, பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் வெங்கடராமன் படத்தொகுப்பு பணிகளையும், தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர். இயக்குநர் மதுமிதா ஏற்கனவே ‘வல்லமை தாராயோ’, ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘கே.டி’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் ‘கே.டி’ படத்தின் இந்தி மறுபதிப்பான ‘காளிதர் லாபதா’ வெளியானது. மதுமிதா இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‘ஜான் டோ’ திரைப்படத்தின் பதாகை வெளியானது. இப்படத்தில் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கிறார்
















