பாகிஸ்தான் – ஈரான் எல்லை வர்த்தகக் சுங்கச்சாவடி அதிரடியாக மீண்டும் திறந்துவிடப்பட்டது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையிலுள்ள காப்த்-ரிம்தான் சோதனைச் சாவடி கடந்த ஒருவாரத்துக்கு முன்னதாக திடீரென முடக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு லோரிகள் அணிவகுத்து நின்றன. இதனால் சமையல் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். தற்போது எல்லை திறக்கப்பட்டு, நள்ளிரவு முதல் லோரிகள் சீறிப்பாய்ந்து இருபுறமும் செல்லத் தொடங்கியுள்ளன. இதனால் வர்த்தகர்கள் மற்றும் பரிதாபமாக சிக்கித் தவித்த லோரி ஓட்டுநர்கள் மிகுந்த நிம்மதி அடைந்துள்ளனர்.
















