திமுகவினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சோர்ந்துவிட மாட்டார்களென தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெக அரசில் காவல் துறையை சட்டம் ஒழுங்கு காப்பாற்றுவதற்கு பொதுமக்களை காப்பாற்றுவதற்கு பயன்படுத்தாமல், சிறையில் இருக்கக்கூடிய கைதிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. பழனி கோவிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் இடத்தை இரண்டு கோடி ரூபாய்க்கு விட்டதில் முக்கிய குற்றவாளி சிறைச்சாலைக்கு உயிரோடு சென்றவர் ஒரு சில நாட்களில் சாகிறார், அதை குறித்து இதுவரை எந்த விசாரணையும் இல்லை. சிறைச்சாலையில் எப்படி செத்தார் மெயின் அக்யூஸ்ட்? நிர்மல் குமாருடைய பொறுப்பில் இருக்கக்கூடியதுதான் சிறைச்சாலை. சிறைச்சாலையில் ஒருவர் சாகிறார் என்றால் அது சந்தேகத்திற்குரியதாக இருக்கும். நான் பலமுறை அதுபற்றி கேட்டும் அது ஒரு விசாரணை கூட போடவில்லை. சாதாரணமாய் இப்படிப்பட்ட சாவுகள் நடந்தால் விசாரணை செய்து பொதுமக்களுக்கு வெளிப்படையாகக் காட்டும் சூழல் இருக்கும். ஆனால் இவ்வளவு அக்கிரமங்கள் நடந்து கொண்டிருக்கிற தமிழ்நாட்டில் இன்றைக்கு காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி உள்ளனர். அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார்கள். அவர் கைது செய்யப்பட்டது முறையாக கைது செய்யப்பட்டாரா, நியாயம்தானா? இதை அனைத்து வழக்கறிஞர்களும், பார் கவுன்சிலே தலையிட வேண்டும். ஒன்றரை மணிக்கு நீதிமன்றத்திலே அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. உடனடியாக அடுத்த கட்டம் சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் போவதற்கு மூத்த வழக்கறிஞருடைய அலுவலகத்திற்கு சென்று, அவரோடு பேசிக் கொண்டிருக்கிற நேரத்தில் காவல்துறை அத்துமீறி ஒரு வழக்கறிஞருடைய அலுவலகத்திலே சென்று அவரை கைது செய்திருப்பது மிக மிக கேவலமான ஒரு செயல். உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் இது போன்ற செயல்களில் காவல்துறை ஈடுபடக்கூடாது என்று பல தீர்ப்புகள் இருக்கின்றன. அதையெல்லாம் நீதிமன்றத்தில் நிச்சயமாக அதனுடைய கவனத்தில் கொண்டு வருவோம். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது, இப்போ கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்கள் ரெய்டு இது எல்லாமே வந்து என்னன்னா, திருச்சி கிழக்கு இந்த இடைத்தேர்தலை மையமாக வச்சுதான் அரசு இப்படி ஒரு நடவடிக்கைக்கு போறாங்கன்னு பத்திரிக்கையில் செய்திகள் எல்லாம் எழுதி இருக்காங்க, அப்படியென்று பார்க்கிறீர்களா? அன்பில் மகேஷ் வந்து பக்கத்து தொகுதிக்காரர், நேரு வந்து அந்த தொகுதி பொறுப்பேற்று நடத்த போறார். அவங்களுக்கு தகவல் போயிருக்கும் இல்லையா? ஆகையினால அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், திமுகவை பொறுத்தமட்டிலும் எங்கள் கட்சியில் கே.என்.நேரு போன்றவர்கள் எல்லாம் பல வழக்குகளை சந்தித்து வெற்றி பெற்று வந்தவர். ஆக, இதெல்லாம் அவருக்கு ஒன்றுமே கிடையாது. நீங்கள் அடிக்க அடிக்கத்தான் பந்து உந்துவாங்க, தீட்ட தீட்டத்தான் வைரம் ஜொலிக்கும். அடக்க அடக்கத்தான் திமுகக்காரன் துடிச்சி எழுந்துருவான். ஆக, நீங்கள் வழக்கு ஒவ்வொரு வழக்கு போட்டீங்கன்னா ஒரு படி மேலே எகிறி குதித்துதான் கட்சிக்காரன் வருவானே தவிர, யாரும் சோர்ந்து போய்விட மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
















