மோகன்லால் – அனூப் சத்யன் இணையும் புதியப் படம் பூஜையுடன் தொடங்கியது. துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன், சுரேஷ் கோபி மற்றும் ஷோபனா ஆகியோர் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியானப் படம் ‘வரனஅவஷ்யமுண்டு’. இப்படத்தை இயக்கிய இயக்குநர் அனூப் சத்யன், தற்போது நடிகர் மோகன்லாலை வைத்து தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார்.
லாலேட்டன் 368’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் பூஜையுடன் தொடங்கியது. ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர், பினு ஜார்ஜ் அலெக்சாண்டருடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.



















