மிதுன் மகேஸ்வரன் இயக்கி நடிக்கும் ‘அரிகொம்பன்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘அரிகொம்பன்’.
இப்படத்தின் முன்னோட்டத்தை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் வெளியிட்டார். காடுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்பதை முன்னோட்டம் உணர்த்துகிறது. மிதுன் மகேஸ்வரன் எழுதி, இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் சஜிஷ்ணா சேவியர், தேவிகா கிருஷ்ணன், இயக்குநர் சுப்ரமணியம் சிவா, அப்புக்குட்டி, ஆதிரா, முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காட்டுப் பின்னணியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘அரிகொம்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ள நிலையில், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.



















