முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். வீட்டில் இருந்தபடி அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, நேற்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், ஓபிஎஸ் உடல்நலம் குறித்தும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வெடுத்து வரும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.



















