கொலம்பியாவில் ராணுவ முகாம் மீது நடந்த டிரோன் தாக்குதலில் 3 வீரர்கள் பலியானார்கள். கொலம்பியா நாட்டில் சன்டா ரோசா டெல் சூர் என்ற சிறிய நகரம் உள்ளது. அந்த நகரில் அந்த நாட்டின் ராணுவ முகாம் இருக்கிறது. அந்த நகரில் தங்க சுரங்கங்கள் அதிகமாக உள்ளன. இந்த நகரத்தை கல்ப் கிளான் என்ற தேசிய விடுதலை ராணுவ அமைப்பினர் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்த ராணுவ முகாம் மீது திடீரென டிரோன் தாக்குதல் நடைபெற்று உள்ளது. இதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. டிரோன் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எங்கும் தப்பி செல்ல முடியாது என்று அந்த நாட்டின் அதிபர் அபிலர்டோ டி லா எஸ்பிரில்லா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



















