ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. இதில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த ஈரான் அதற்கு பதிலடி கொடுத்தது. பல மாதங்களாக நீடித்து வந்த இந்த மோதலில் திருப்பம் ஏற்பட்டது. ஈரானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி உள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் சற்று தணிந்துள்ளது. இந்த நிலையில், ஈரான் நாட்டின் தலைமை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரான மேஜர் ஜெனரல் மொசென் ரெஜாய், லெபனான் நாட்டை அடிப்படையாக கொண்ட அல்-மயாதீன் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது, அமெரிக்கா தவறாக முடிவு செய்து எங்களை தாக்கினால், நாங்கள் அருகேயுள்ள தளங்களை மட்டும் தாக்கி விட்டு அமைதியாக இருக்கமாட்டோம். அருகேயுள்ள அனைத்து ராணுவ தளங்களையும் தாக்குவோம். அதனுடன், தொலைவிலுள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் தாக்குவோம். அது என்னவென்றால், இதுவரை நாங்கள் தாக்காத தளங்களையும் தாக்குவோம் என்றார்.


















