பாலஸ்தீன மக்களுக்கு நிரந்தர இறையாண்மை வழங்கும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள பல பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதேவேளை, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதியில் இருந்து இஸ்ரேல் விலக வேண்டும் என்ற ஐநா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு நிரந்தர இறையாண்மை வழங்கும் ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. உருகுவே கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. கிழக்கு ஜெருசலேம், சிரியாவின் கோலன் ஹைட்ஸ், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் உள்ள இயற்கை வளங்கள் மீது பாலஸ்தீன மக்களுக்கு நிரந்தர இறையாண்மை வழங்கும் இந்த தீர்மானத்திற்கு இந்தியா உள்பட 193 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.



















