ஃபேமிலி பாய் படத்தின் பதாகையை விக்னேஷ் சிவன் வெளியிட்டார். மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீராகணம்..’ எனும் முதல் பாடலும், அதற்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கின்றன. மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம்.சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் ஜே.பி.இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். வி கவனிக்க, கலை இயக்கத்தை சி.கே.முஜிபுர் ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார்.



















