பெலாரஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு பெலாரஸ். உக்ரைன் அருகே அமைந்துள்ள இந்நாட்டின் அதிபராக அலெக்சாண்டர் லுகான்ஸ்கோ செயல்பட்டு வருகிறார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு பெலாரஸ் ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், பெலாரஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் மெக்சிம் ரிசன்கொவ் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். விமானம் மூலம் நேற்று இரவு டில்லி வந்த அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். இந்த பயணத்தின்போது இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கை மெக்சிம் ரிசன்கொவ் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. மேலும், இந்தியா – பெலாரஸ் வர்த்தக ஆணைய கூட்டத்தில் மெக்சிம் பங்கேற்கிறார்.



















