கனடாவில் நீண்ட காலமாக இயங்கிய வண்ணம் சமூகப் பணியும் கலாச்சார மேம்பாட்டுப் பணியும் ஆறறிவருகின்ற Heritage Beyond Borders பல் கலாச்சார அமைப்பு கடந்த 14-11-2026 அன்று சனிக்கிழமை நடத்திய Awards Gala and Multicultural Entertainment Night என்னும் விருதுகள் வழங்கம் விழாவில் விருதுகள் பெற்ற இரண்டு தமிழ்க் கனடிய சமூகச் செயற்பாட்டாளர்களை அங்கு கலந்து கொண்டட வெவ்வேறு மொழிகள் சார்ந்த சமூகுச் செயற்;பாட்டாளர்களும் அரசியல் பிரமுகர்களும் வாழ்த்திச் சென்றார்கள்.
ரொறன்ரோநகரின் தெற்குப் பகுதியில் பெருந்தெரு-27 ல்; அமைந்துள்ள Woodbine Banquet and Convention Centre மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி வைபவத்தில் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக முது தமிழர்கள் மன்றங்களின் செயற்பாடுகளில் தகுந்த ஆலோசனைகள் வழங்கும் பிரதான பங்கு வகிக்கும் திருவாளர் டேவிற் ராஜரட்ணம் மற்றும் மற்றும் கனடாவில் மருத்துவத்துறை சார்ந்த தொழிற்சங்கப் பணி மறறும் தாயகத்தில் பாதிக்கப்பெற்ற மக்களுக்கு உதவிகள் நல்கும் பணி ஆகியவற்றில் தன்னை பணிகளில் தன்னைஈடுபடுத்திக் கொண்ட வீடு விற்பனை முகவர் திருவருள் அருள் அமிர்தலிங்கம்; ஆகிய இருவரே விருதுகள்பெற்ற இரண்டு தமிழ்க் கனேடியர்கள் ஆகும். இந்த இருவரோடும் மேலும் பல்லினங்களைச் சேர்ந்த எண்மரும் விருதுகற் வழங்கிக் கௌரவிக்கப்பெற்றனர்.
விழா நிறுவனரும் பத்திரிகையாளருமான நீல் நந்தா மற்றும் தமிழர் சமூகச் செயற்பாட்டாளர்கள் விசு கணபதிப்பிள்ளை மற்றும் ஜெயம் அவர்கள் ஆகியோரும் விருது பெற்றவர்களை வாழ்த்தினர்.
கனடா உதயன் ஆசிீரிய பீடத்தாரும் தங்கள் வாழ்த்துக்களை விருதாளர்களுக்கு தெரிவிக்கின்றனர்.
செய்தி- சத்தியன்




















