நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஒருவர் நிதி மோசடியில் ஈடுபட்டமையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
சாவகச்சேரியை சேர்ந்த குறித்த வேட்பாளர் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஒருவரை ஏமாற்றிய நிலையில், யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிசாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.