ஸ்காபுறோவில் செயற்பாட்டு அலுவலகத்தைக் கொண்டு இயங்கிவரும் ‘Centre for Youth Empowerment & Community Services’ நடத்திய இராப்போசன விருந்து
கடந்த நான்கு வருடங்களாக ஸ்காபுறோவில் செயற்பாட்டு அலுவலகத்தைக் கொண்டு இயங்கிவரும் ‘Centre for Youth Empowerment & Community Services’ நடத்திய இராப்போசன விருந்து கடந்த 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ஸ்காபுறோவில் உள்ள பாபா பேங்குவற் மண்டபத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக ஒன்றாரியோ மாகாண அமைச்சரும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினருமான அவர்களும் மத்திய பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்காபுறோ வடக்கு பாராளுமன்ற உறுப்பினருமான அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
விழா நிகழ்ச்சிகளை மதிசயன் அவர்களும் செல்வி ஹம்சாயினி சாந்தகுமார் அவர்களும் தொகுத்து வழங்கினார்கள்.
‘Centre for Youth Empowerment & Community Services’ என்னும் இலாப நோக்கமற்ற இந்த அமைப்பின் இயக்குனர் சபை உறுப்பினர் மரியாம்பிள்ளை மரியராசா மற்றும் ராம் சங்கர் சிவநாதன் ஆகியோர் நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் வகையில் வருகை தந்த விருந்தினர்களில் அழைத்து மங்கல விளக்கேற்றி வைத்த பின்னர் நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. அமைப்பின் தலைவர் சங்கர் நல்லதம்பி அவர்களும் அங்கு கலந்து கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய பின்னர் ‘Centre for Youth Empowerment & Community Services’ அமைப்பிற்கு தொண்டர் சேவை ஆற்றும் இளைய தலைமுறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
பாபு ஜெயகாந்தன் அவர்களின் குழுவினர் அங்கு மெல்லிசைப் பாடல்களை வழங்கி சபையோரை மகிழ்வித்தார்.
அன்றைய வைபவத்தில் ‘Centre for Youth Empowerment & Community Services’ அமைப்பின் நோக்கங்களை நன்கு தெரிந்தும் புரிந்தும் கொண்ட அன்பர்களும் வர்த்தகப் பிரமுகர்களும் அங்கு சமூகமளித்து தங்கள் ஆதரவை வழங்கினார்கள். இதன் மூலம் இந்த அமைப்பு மேலும் தங்கள் சேவைகளை விஸ்த்தரித்துக் கொண்டு மக்கள் பயனடையும் வண்ணம் தொடர்ந்து சேவையாற்றவுள்ளதாக அங்கு உரையாற்றிய இயக்குனர் சபை உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.