யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் தீ விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அராலி தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அம்பலவாணர் நாகேந்திரம் (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் நடக்க முடியாத நீரிழிவு நோயாளி ஆவார். கடந்த 22ஆம் திகதி விசிய பலத்த காற்றுடன் கூடிய மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன்போது மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தியானது அவரது ஆடையில் பற்றியதில் அவர் தீ காயங்களுக்கு உள்ளாகினார்.
இந்நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 24ம் திகதி செவ்வாய்கிழமை அ ன்ற்றையதினம் உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
























