தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 41 ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தென் தமிழ்நாடு பற்றி கலைஞர் கண்ட கனவை தற்போது நனவாக்கி வருகிறோம். தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களுக்கான கட்டமைப்பை திராவிட மாடல் அரசு சிறப்பாக உருவாக்கி உள்ளது. முத்துநகரான தூத்துக்குடியில் 2-வது முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் கப்பல்களுக்கு நுழைவு வாயில் தூத்துக்குடி. செமி கண்டக்டர், மின் வாகனம், பசுமை ஹட்ரஜன் உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது. வரும் 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றுவோம். சொன்னதை செய்வோம் என்பது தான் திமுக அரசின் குறிக்கோள். இவ்வாறு அவர் கூறினார்.
























