அதிபர் திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர்
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி டில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் போரில் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அதிபர் திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். அதிபர் திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் சஞ்சய் சேத் மரியாதை ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
























