பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம், செங்கோட்டையனை இயக்குவது அண்ணாமலையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
போராடுபவர்களையும், கேள்வி கேட்போரையும் நசுக்கும் அரசாக தி.மு.க. அரசு இருக்கிறது. தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்குவோம் எனத் தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியதைத்தான் கேட்டனர். அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவிற்கு பின்னணியில் இருப்பது தி.மு.க. தி.மு.க.வின் தூண்டுதலில்தான் அனைத்து பிரச்சனைகளும் இங்கு நடக்கின்றன. செங்கோட்டையனை பா.ஜ.க.வினர் தற்போதைக்கு சந்திக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.






















