கனடாவைத் தலைமையகமாகக் கொண்டும் உலகில் சுமார் இருபது நாடுகளில் கிளைகளையும் நிறுவியும் வெற்றிகரமாக 50 ஆண்டுகளையும் கடந்து செயற்பட்டு வரும் அனைத்துலகத் தமிழர்களின் ஒரே அமைப்பான ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும் இயக்கத்தின் 52வது எழுச்சி மாநாடும் செந்தமிழ் கலை மாலை பண்பாட்டு விழாவும் எதிர்வரும் 25-10-2025 அன்று சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணி தொடக்கம் ஜேர்மனி தேசத்தின் நகரில் அமைந்துள்ள KOPERNIKUS GYMNASIUM AULA மண்டபத்தில் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பெற்றுள்ளது.
மேற்படி இருபெரும் விழாக்களை ஏற்பாடு செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் . உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அனைத்துலக செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை. கணேசலிங்கம் அவர்களும் அனைத்துலக கிளைகளுக்கு பொறுப்பான ஜேர்மனி வாழ் திரு .ஆர். ராஜசூரியர் ஆகியோரின் தலைமையில் ஏனைய பல முக்கிய உறுப்பினர்கள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக உழைத்துள்ளார்கள்.
எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ள மேற்படி மாநாடு மற்றும் பண்பாட்டு விழா தொடர்பாக ஜேர்மனி தேசத்தில் வெளிவரும் ஜேர்மன் மொழி பத்திரிகைகளிலும் செய்திகள் பிரசுரமாகியுள்ளதும் எமது புனிதமான இயக்கதின் மகிமையை பறைசாற்றுகின்றது அல்லவா?.
எனவே இவர்கள் அனைவருக்கும் கனடாவில் இயங்கும் தலைமையகத்தின் அகிலத் தலைவர் சிவா. கணபதிப்பிள்ளை அவர்களும் இயக்கத்தின் கனடா கிளையின் தலைவரும் அகிலச் செயற்குழுவின் சர்வதேச ஊடகப் பொறுப்பாளருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் இணைந்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
மேற்படி ஜேர்மனி மாநாடு தொடர்பாக சிவா. கணபதிப்பிள்ளை அவர்களும். ஆர். என். லோகேந்திரலிங்கமும் மேலும் குறிப்பிடுகையில். ‘எதிர்வரும் 25ம் திகதி சனிக்கிழமை ஜேர்மனி தேசத்தின் றேய்ன் நகரில் நடைபெறவுள்ள எழுச்சி மாநாடும் பண்பாட்டு விழாவும் இக்காலப் பகுதியில் எமது புனிதமான இயக்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானதொன்றாக விளங்குகின்றது.
காரணம் 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பெற்று இத்தனை ஆண்டுகாலம் பக்குவமான முறையில் பல இயக்குனர் சபைகளுக்கு கீழ் இயங்கிவந்த எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை சீர்குலைக்க சில நாடுகளில் சட்டவிரோதமாகச் செயற்படும் ‘புல்லுருவிகள்’ தங்கள் சுயநலத்திற்காகவும் தவறான வழியில் புகழை ஈட்டி விடலாம் என்ற நப்பாசையிலும் மிகவும் கீழ்த் தரமாக செயற்பட்டு வருகின்றார்கள். கனடாவில் இயங்கிவரும் எமது உத்தியோகபூர்வமான தலைமையகத்திற்கு மாத்திரமே சொந்தமான இயக்கத்தின் இலட்சினையை தவறாகப் பயன்படுத்துகின்றார்கள். அத்துடன் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் அதிகார துஸ்பிரயோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ‘பொய்யர்கள்’ பலரை எமது புனிதமான இயக்கத்தின் அங்கத்தவர்களாக சட்டவிரோதமாக இணைத்து கூட்டங்களை நடத்தி இயக்கத்தை மாசுபடுத்த முனைகின்றார்கள். அத்துடன் நிதி மோசடிகளிலும் ஈடுபட்டுவருகின்றார்கள் என்ற செய்திகளும் எம்மை வந்தடைந்துள்ளன.
எனவே. இவ்வாறான பல இடையூறுகளும் ‘ஆபத்துக்களும்’ நிறைந்த இந்த காலப்பகுதியில் மேற்படி பொய்யர்களான மோசடிக்குழுக்களின் துஸ்பிரயோகத்திலிருந்து எமது புனிதமான இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் உண்டு என்பதை அழுத்தமாகக் குறிப்பிடுகின்றோம்.
எனவே. எமது கனடா தலைமையகத்தின் கீழ் உலகெங்கும் இயங்கிவரும் கிளைகளையும் தலைமையகத்தையும் மேலும் உறுதியுடன் செயற்பட நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.
இவ்வாறான ஒரு தருணத்தில் எமது இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும் இயக்கத்தின் 52வது எழுச்சி மாநாடும் செந்தமிழ் கலை மாலை பண்பாட்டு விழாவும் சிறந்த முறையில் நேர்த்தியாக கொண்டாடப்பெறவேண்டும் என்று இந்தப் பணியில் தம்மை அர்ப்பணித்து செயற்படும் அனைத்து உறுப்பினர்களும் உலகின் பல பாகங்களிலிருந்தும் கனடாவிலிருந்தும் நிஜமான உறுப்பினர்களும் தொண்டர்களும் கூட்டாக எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் 25ம் திகதி சனிக்கிழமையன்று ஜேர்மனியில் நடைபெறவுள்ள இயக்கத்தின் 52வது எழுச்சி மாநாட்டிலும் செந்தமிழ் கலை மாலை பண்பாட்டு விழாவிலும் முக்கிய விருந்தினர்களாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கதின் பிரித்தானியக் கிளையிலிருந்து முக்கியமான உறுப்பினர்ளும் கலந்து கொள்கின்றார்கள் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தவர்களாக நாம் உள்ளோம். இவ்வாறு பிரித்தானியாவிலிருந்து பிரித்தானியக் கிளையின் தலைவர் அமுது இளஞ்செழியன் அவர்களும் அதிபரும் டாக்டருமான சரவணமுத்து பூலோகநாதன் அவர்களும் கிளையின் செயலாளரான பொன்னம்பலம் வசந்தகுமாரன் அவர்களும் கிளையின் ஆலோசகராக அரும்பணியாற்றும் முருகேசு தங்கராஜா அவர்களும் கிளையின் ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம் விமலதாசன் அவர்களும் கிளையின் பொருளாளர்
தாமோதரம்பிள்ளை பிரபாதரன் அவர்களும் கலந்து கொள்வதன் மூலம் புனிதமான எமது இயக்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் சீராக தொடரவும் சட்டவிரோதச் செயற்பாடுகளில் தமிழ்நாட்டிலும் மலேசியாவிலும் இயங்கும் ‘குழப்பவாதிகள்’ அனைவரும் உலகத் தமிழர்களால் நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கின்றோம். அவற்றுக்காக நாம் அனைவரும் ஒன்றாக உழைப்போம்.
இவ்வாறு கனடாவிலிருந்து தலைமையகத்தின் அகிலத் தலைவர் சிவா. கணபதிப்பிள்ளை அவர்களும் இயக்கத்தின் கனடா கிளையின் தலைவரும் அகிலச் செயற்குழுவின் சர்வதேச ஊடகப் பொறுப்பாளருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.
sivakana16@gmail.com மற்றும் logendralingam2305@yahoo.com ஆகிய மின்னஞ்சல்கள் மூலம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அதிகாரபூர்வமான தலைமையகம் தொடர்பான மேலதிக விபரங்களையும் பெற்றுக்கொள்ளலாம்
























