கிரிவலம் அறக்கட்டளையின் கிழக்கு மாகாண காரியாலயம் மட்டு களுவாஞ்சிக்குடியில் திறந்து வைப்பு
(கனகராசா சரவணன்)
ஜேர்மனியை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் கிரிவலம் அறக்கட்டளை கிழக்கு மாகாணத்திற்கான காரியாலயம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்துக்கு முன்னால் உள்ள கட்டிடத்தில் அண்மையில் அறக்கட்டளையின் கிழக்கு மாகாண செயலாளர் பி. கே.லிவாஸ் தலைமையில் சம்பிராய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அறக்கட்டளையின் கிழக்கு மாகாண செயலாளர் பி .கே.லிவாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக களுவாஞ்சிக்குடி பிரதேச சபையின் தவிசாளர் என்.வினோராஜ், பட்டிருப்பு மகா வித்தியாலய அதிபர் எம்.சபேஷ் குமார், சட்டத்தரணி கே. கிருபாகரன:. கிராம உத்தியோகத்தர் எம்.அனோஜன், முல்லைத்தீவு ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் உப தலைவர் எஸ்.எஸ்.சீலன்,
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில பண்டார, அறக்கட்டளையின் பொருளாளர் கே.ரி,பாரதி, உட்பட அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு காரியாலயத்தை சம்பிராய பூர்வமாக நாடாவெட்டி திறந்துவைத்தனர்
இதனை தொடர்ந்து முதியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.
























