பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம். பி ஆற்றிய தெரிவிப்பு
இப்போது இரண்டு அமைச்சுக்களான பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் நான் தெரிவிக்கும் கருத்துக்களை இரண்டு விதமான வழிகளில் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
மதிப்பிற்குரிய தலைமை உறுப்பினரே!
நீங்கள் இதை ஆக்கப்பூர்வமான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். உண்மையான பிரச்சினைகள் என்று சில பிரச்சினைகளை நாங்கள் பட்டியலிடுகிறோம். அவை இந்த நாட்டின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். நீங்கள் அவற்றைக் கவனிக்கவில்லையென்றால் – நாட்டின் அந்தப் பிரிவினருடன் இந்த நாட்டின் சட்டபூர்வமான தன்மை குறித்து ஒரு பிரச்சினை எழும்.
நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கங்கள் கவனித்து அவற்றைச் சரிசெய்யும் என்று எதிர்பார்க்கக் கூடிய சில பிரச்சினைகளை நாங்கள் எழுப்புகிறோம். ஏனென்றால் அவை இந்த நாட்டின் சட்டபூர்வமான தன்மையின் மையத்திற்குச் செல்கின்றன. எனவே – தமிழ் மக்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க முயற்சிக்கும் விதத்தில் நீங்கள் அதை எடுத்துக் கொள்ளவேண்டும். இது இயற்கையாகவே ஒரு உணர்ச்சிபூர்வமான விடயமாகும். ஆனால் நீங்கள் அந்த உணர்ச்சிகளை எல்லாம் விட்டுவிட்டு அதை நேர்மறையான வழியில் எடுத்துக் கொண்டால் அல்லது முழுமையாக மறுத்து –
தமிழர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என்றும்இ தமிழர்கள் இலங்கையை அழிக்க விரும்புபவர்கள் என்றும் நீங்கள் தமிழர்கள் மீது பழி சுமத்தவும்கூடும். எனவே இந்த இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் நான் சொல்ல வேண்டும் என்று நம்புவதை நான் கூறப் போகிறேன்.
மாண்புமிகு தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
நான் நேர்மையாகச் சொன்னால் – இப்போது பாதுகாப்பு அமைச்சை எடுத்துக் கொண்டால் – தமிழ் மக்களைப் பொறுத்தவரை – அது முற்றாக வெறுக்கப்படும் அமைச்சாகும். இந்த அரசாங்கத்தின் கீழ் மட்டுமல்ல – முந்தைய அரசாங்கங்களின் கீழும் கூட வெறுக்கப்படும் அமைச்சாகும். அரச கட்டமைப்பின் கீழ் மிகவும் வெறுக்கப்பட்ட அமைச்சாக இது ஏன் உள்ளது? ஏனென்றால் அந்த அமைச்சே தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து துன்பங்களுக்கும் காரணமாகும். போரின் போது மட்டுமல்ல – போருக்குப் பின்னரான 16 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இத்தகைய நிலையே இந்த அமைச்சின் கீழ் உள்ளது. எனவே நீங்கள் இந்த விடயங்கள் தொடர்பாக என்ன செய்யப் போகிறீர்கள்?
கௌரவ பாதுகாப்பு துணை அமைச்சர் தனது தொடக்க உரையில் வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பரப்புவதில் இராணுவத்தின் ஈடுபாடு குறித்து நான் முன்பு கூறிய சில கருத்துக்களைக் குறிப்பிட்டார். நான் சொன்னதில் நான் உறுதியாகவே இருக்கிறேன்.
கௌரவ துணை பாதுகாப்பு அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு வந்து யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் கலந்து கொண்டால் அவர் இதனைப் பற்றி அறிந்து கொள்வார். ஜனாதிபதிகளால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் முதல் – இராணுவ அதிகாரிகள் அங்கே இருப்பார்கள். யாழ்ப்பாண கட்டளை தளபதி அங்கே இருப்பார். இவை பற்றி பேசப்படும்போது – காவல்துறையும் இராணுவமும் கைகோர்த்து செயல்படுகின்றன என்பதை நான் மட்டுமல்ல அனைவருமே ஒப்புக்கொள்வார்கள். போதைப்பொருள் பரப்புதல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வரும்போது – போதைப்பொருள் விற்பனையாளர்களாகக் கண்டுபிடிக்கப்பட்ட அனைவரும் – மக்களால் துரத்தப்படும்போது அவர்கள் இராணுவ முகாம்களுக்குள் சென்று ஒளிந்து கொள்கிறார்கள்.
பின்னர் மக்கள் காவல்துறையிடம் முறைப்பாடு அளிக்க முயற்சிக்கும்போது – காவல்துறையினர் முறைப்பாடுகளை ஏற்க மறுக்கிறார்கள் என்பதே அனைவரதும் குற்றச்சாட்டாக உள்ளது. அதன் பிறகு மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று காவல்துறையினர் புகார்களை ஏற்க மறுப்பதாகவும் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்கள். அதுதான் உண்மை. இப்போது நீங்கள் விரும்பினால் அதை மறுக்கலாம். ஆனால் நீங்கள் அதை மறுத்தால் – அதன் அர்த்தம் என்னவென்றால் – நீங்கள் கடந்த காலத்தின் ஒரு பகுதியாக மட்டுமே பார்க்கப்படுவீர்கள். நீங்கள் வேறுபட்டவர் அல்ல என்பது வெளிப்படும்.
நீங்கள் நம்பகமானவர்களாக இருக்க விரும்பினால் – அதை மறுப்பதையும் அதைச் சமாளிப்பதையும் விட்டுவிடுங்கள். உண்மையாக நீங்கள் செயற்பட்டால் – எங்கள் ஒத்துழைப்பு உங்களுக்கு இருக்கும். ஏனென்றால் இதனால் பாதிக்கப்படுவது எங்கள் மக்கள்தான். எனவே நீங்கள் அந்த பாதையில் சென்றால் எங்கள் முழு ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் நீங்கள் இன்று காலை சொன்னதைப் போன்று நீங்கள் செய்ததை வெறுமனே மறுக்க முயற்சித்தால் – பாதுகாப்பு அமைச்சு – பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் காவல்துறை மீது மக்கள் ஏற்கனவே வைத்திருக்கும் சந்தேகத்தை நீங்கள் மேலும் வலுப்படுத்துவீர்கள்.
இப்போது ஒரு எளிய தர்க்கரீதியான பிரச்சினை உள்ளது. கௌரவ துணை பாதுகாப்பு அமைச்சரே – இராணுவத்தில் உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்ற மற்றொரு ஜேவிபி உறுப்பினரும் உள்ளார் என்று நினைக்கிறேன். இராணுவம்இ கடற்படை மற்றும் விமானப்படை வடக்கு கிழக்கில் எவ்வளவு சிறந்த சேவையைச் செய்கிறது என்பதுபற்றி உங்களுக்குத் தெரியும் என்று சொன்னீர்கள். வடக்கு கிழக்கில் இராணுவ அமைப்பின் இருப்பு விகிதத்தை யாழ்ப்பாணத்தில் 14 குடிமகனுக்கு 1 இராணுவம் என்றும் வன்னியில் 2 குடிமகனுக்கு 1 இராணுவம் என்றும் குறிப்பிட்டதால் இந்தக் கருத்து உங்களால் தெரிவிக்கப்பட்டது என்று நான் நினைக்கிறேன்.
எனவே இவ்வளவு பெரிய இருப்புடன் இராணுவம் – கடற்படை மற்றும் விமானப்படை சிறந்த சேவையைச் செய்கின்றன என்பதை நியாயப்படுத்த முயல்கிறீர்கள்.
இப்போது போதைப்பொருள் பற்றிப் பேசலாம். போதைப்பொருள் பிரச்சினையை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
வடக்கு கிழக்கு கடற்கரையில் எல்லா இடங்களிலும் கடற்படை உள்ளது. ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் உங்களுக்கு ஒரு கடற்படை சோதனைச் சாவடிகள் உள்ளன. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். வடக்கு கிழக்கு கடற்கரையின் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் – அல்லது அதிகபட்சம் 2 கி.மீற்றருக்கு ஒரு கடற்படை சோதனைச் சாவடி அல்லது ஏதேனும் ஒரு முகாம் அங்கு இருக்கும். அவர்கள் அனைவரும் தனியார் நிலத்தையே ஆக்கிரமித்துள்ளனர். சட்டவிரோதமாக தனியார் நிலத்தை ஆக்கிரமித்து அங்கே இருக்கிறார்கள். போரின் போது கூட அவர்கள் இவ்வாறு இருந்ததில்லை. ஏனென்றால் விடுதலைப் புலிகள் அதிகமான பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். போருக்குப் பிறகுதான் கடற்படைஇ இராணுவம் மற்றும் விமானப்படை இவ்வளவு பெரிய அளவில் உருவெடுத்தனர். அதேவேளை போருக்குப் பிறகுதான் வடக்கு கிழக்கில் போதைப்பொருள் இவ்வளவு அச்சுறுத்தலாவும் உள்ளது. இதை எப்படி விளக்குவீர்கள்? அதை எப்படி விளக்குகிறீர்கள்?
உண்மையில் போர் காலத்தில் விடுதலைப்புலிகள் இருந்தபோதுஇ வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பிரச்சினை இருக்கவில்லை. அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கூட இருக்கவில்லை. ஏனென்றால் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் விடுதலைப்புலிகள் செயற்பட்டிருந்தனர். அதனால் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அஞ்சினார்கள். அன்றைய அரசாங்கங்கள் கூட கிளர்ச்சி எதிர்ப்பு உத்தியாக போதைப்பொருட்களைப் பரப்புவதற்கு முயற்சி எடுத்திருந்த போதிலும்- அதனை பரப்புவதற்கு அரசாங்கத்தால் முடிந்திருக்கவில்லை. போருக்குப் பிறகுஇ இன்று 16 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பிரச்சினை கற்பனை செய்ய முடியாத உச்சத்தை எட்டியுள்ளது என்றால் எப்படி?
கௌரவ அமைச்சரே! இதை நீங்கள் மறுக்க முயற்சித்தால் – எங்களிடம் ஏற்கனவே உள்ள சந்தேகத்தை நீங்கள் மேலும் வலுப்படுத்துகிறீர்கள் என்றே அர்த்தமாகும். எனவே இதுதான் உண்மை. நீங்கள் அதை மறுக்க முடியாது. நான் 14 க்கு 1 – 2 க்கு 1 என்னும் இராணுவ பிரசன்னம் பற்றிப் பேசுவதென்பது உத்தியோக பூர்வமான புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயாகும். உங்களிடம் பாரிய உளவுத்துறை கட்டமைப்பு உள்ளது. எனவே இந்த போதைப்பொருள் விடயத்தில் இராணுவத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை மறுப்பது ஒரு முழுமையான பொய்யாகும். அது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. நீங்கள் விரும்பினால் அதை மறுக்கலாம்.
மேலும் -பொறுப்புக்கூறல் தொடர்பான மற்றொரு பிரச்சினை உள்ளது. இலங்கை என்பது சிங்கள பௌத்தர்களை மட்டும் குறிக்காது என்பதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் – தற்போது இலங்கை இருப்பதுபோன்று சிங்களவர்களுக்கும் அவர்களின் நோக்கங்களுக்கும் மட்டுமானது என்ற நிலைமை மாற்றப்படவேண்டும். அப்படியானால்- போரின் போது பாரிய குற்றங்கள் நடந்தன என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரைஇ அது இனப்படுகொலை. அது இனப்படுகொலை. நான் அந்தக் குற்றச்சாட்டையே முன்வைக்கிறேன். அது இனப்படுகொலை. இப்போது – நீங்கள் அவை குறித்து என்ன செய்யப் போகிறீர்கள்? அவை குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உண்மை என்னவென்றால்இ உங்களுடைய மிகப்பெரிய பங்குபற்றுதலுடன் இந்தக் குற்றங்கள் நடந்திருப்பது பற்றி பேசுவது நான் மட்டுமல்ல. முழு உலகமும் அதைப் பற்றிப் பேசுகிறது.
முப்படைகளைச் சேர்ந்த ஓட்டுமொத்த இராணுவத்தினர் மீதும் அந்தக் குற்றங்களில் சந்தேகிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?
அவர்களில் குற்றமிழைக்காதவர்களின் பெயர்களை நீக்க விரும்பவில்லையா?
குற்றமிழைக்காதவர்கள் தங்கள் பெயர்களை நீக்குவது அவர்களின் சொந்த நலனுக்கும் இந்த நாட்டின் நலனுக்கும் உரியதல்லவா? நீங்கள் அதை எப்படி நீக்கப் போகிறீர்கள்?
இராணுத்தினருள் அனைவரும் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்பதும் எனக்குத் தெரியும்.
ஏனென்றால் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய அனைத்து ஆதாரங்களும் இராணுவம் மூலமாகவே வெளிவந்தன. ஏனென்றால் இராணுவம் நடந்துகொண்ட விதத்தைத் தாங்க முடியாத மனசாட்சி உள்ளவர்களும் அங்கு இருந்திருக்கிறார்கள். அவர்கள் தான் பதிவுகளை எடுத்து அதைக் கசியவிட்டார்கள். அப்படித்தான் ஆதாரங்கள் வெளிவந்தன.
ஒரு ஒழுக்கமான இராணுவமோ அல்லது ஒரு ஒழுக்கமான நிறுவனமோ இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று சிலர் சரியாகச் சிந்தித்துச் செயல்பட்டதால்தான் இன்று இலங்கை இராணுவமும் கடற்படையும் இவ்வளவு கொடூரமான குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஆனால் – சரியாகச் சிந்தித்த நபருக்கும் ஒழுக்கத்தை மீறுபவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை என்னால் பார்க்க முடியவில்லை. அது என்னால் மட்டுமல்ல. முழு உலகத்தாலும் பார்க்க முடியவில்லை.
முந்தைய அவையின் உறுப்பினராக முன்னாள் நாடாளுமன்றத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா இருந்தபோது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பட்ஜெட் விவாதிக்கப்பட்ட போதெல்லாம் அவர் எழுந்து நின்று – பல சந்தர்ப்பங்களில் 50க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் போர் குற்றங்களில் ஈடுபட்டு இருப்பதாகக் கூறுவார். அவர்கள் மீது பயணத் தடைகள் உள்ளன. அவர்கள் ஏதோ ஒரு குற்றப் பட்டியலில் இருப்பதால் அவர்களால் வெளிநாடு செல்ல முடியவில்லை. அவர்கள் மட்டுமல்ல அவர்களது குடும்பங்களும் பட்டியலில் உள்ளனர். எனவே நீங்கள் உங்கள் பெயர்களை அத்தகைய குற்றச்சாட்டுக்களில் இருந்து அழிக்க விரும்பவில்லையா? நீங்கள் கையாள விரும்பும் மரபு இதுதானா? அது செய்யப்பட வேண்டுமானால் – உண்மையான சர்வதேச விசாரணையை எதிர்ப்பதை இராணுவம் நிறுத்த வேண்டும். ஏனெனில் அதுதான் ஒரே வழி. அதுதான் ஒரே உண்மையான வழி. அப்போதுதான் கடந்த காலப் போர்களின் சாபம் நீங்கும். யார் என்ன செய்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். மோசமான செயல்களைச் செய்தவர்களே குற்றவாளிகளாக கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள்.
நீங்கள் விடுதலைப்புலிகளை அழித்துவிட்டீர்கள். எந்த விசாரணையும் இல்லாமல் நீங்கள் அவர்களை கொன்றீர்கள். நீங்கள் ஏற்கனவே உங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளீர்கள். நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லாமல் அவர்கள் அனைவரும் இறக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து அவர்களைக் கொன்றீர்கள். அதுதான் நடந்தது. ஆனால் அவர்களைக் கொல்வதாகக் கூறி அப்பாவி மக்களையும் நீங்கள் கொன்றீர்கள். அதனால்தான் இது ஒரு இனப்படுகொலை. அதனால்தான் இது ஒரு இனப்படுகொலை.
எனவே இப்போது நீங்கள் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்கள். வேறு எவரும் இல்லை. இலங்கை அரசும் அதன் இராணுவ அமைப்பும் மட்டுமே இன்று குற்றம் சாட்டப்பட்ட ஒரே அமைப்பு. அது இதுவரை விசாரிக்கப்படவில்லை. நீங்களே உங்களை விசாரிக்க முடியாது. சர்வதேச விசாரணைக்கு உடன்படுங்கள்.
கௌரவத் தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
மற்றறைய அரசாங்களிலிருந்து நீங்கள் வேறுபட்டவர்கள் அல்ல என்பதை ஒப்புக் கொள்ளாத வரை – நீங்கள் முந்தைய அரசாங்கங்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. கடந்த ஆட்சியாளர்கள் இந்தக் குற்றங்கள் அனைத்திலும் மிகவும் உடந்தையாக உள்ளனர். இவ்விடயத்தை நீதியாக கையாள்வதற்கு ஜே.வி.பி ஏன் கவலைப்படுகிறீர்கள்? நீங்களும் இந்த குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததால் தான். எனவே- இது ஒரு நலமோதல் விடயமாகவும் உள்ளது.
ஏனென்றால் – மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தால் மக்களை ஒரு போருக்குத் திரட்ட முடிந்திருக்கவில்லை. அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் இனவெறிப் போரைப் பற்றிப் பேசுவது மட்டும் தான். அவர்களின் சொல்லாட்சி இனவெறி. எனவே அவர்கள் வேறு யாரையாவது வைத்து போருக்கு அணிதிரட்டுவதற்கு நம்பகமான வாதத்தை முன்வைக்கக்கூடிய ஒருவரை அவர்கள் விரும்பினர். அப்போது அதைச் செய்தது ஜே.வி.பிதான். ஜே.வி.பியின் முன்னாள் தோழர் விமல் வீரவன்ச, தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க மற்றும் இந்த அவையின் முன்னணி ஆசனங்களில் அமைந்துள்ள ஜே.வி.பி. தோழர்களும் இராணுவத்துக்கு அணிதிரட்டி இராணுவ முகாம்களை சுற்றி வந்தார்கள்.
இதனால் நீங்கள் குற்ற உணர்ச்சியுடன் இருக்கலாம். பொதுமக்களை அணிதிரட்டி குற்றங்களைச் செய்ததற்காக நீங்கள் குற்ற உணர்ச்சியுடன் இருக்கலாம். இறுதியில் பாதுகாப்பு அமைச்சும் குற்றங்களைச் செய்திருக்கலாம். ஆனால் உங்கள் சொந்தப் பெயர்களை நீங்களே அழிக்க விரும்பினால், அந்த மாற்றம் உங்களிடமிருந்து தொடங்க வேண்டும். அந்த மாற்றம் உங்களிடமிருந்து தொடங்க வேண்டும். நீங்கள் இலங்கையின் கடந்த காலத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதை தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே நம்ப வைக்க விரும்பினால் – நீங்கள் அந்தக் கால ஜேவிபி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இது ஒரு போர் காலம் அல்ல என்பதால் நீங்கள் அந்தக் கால ஜேவிபி அல்ல என்பதைக் காட்டுவதற்கு அணுகுமுறைகள் வேறுபட்டவையாக இருக்கலாம். அணுகுமுறை மாற்றத்துக்காக நாங்கள் உங்களை மன்னிக்க போவதில்லை.
நான் எழுப்பிய பிரச்சினைகளை நீங்கள் சரியாக கையாள வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சு தொடர்பாக நாங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை உங்கள் மீது தவறு கண்டுபிடிப்பதற்காக மட்டுமே என்று எடுத்துக்கொள்ளாதீர்கள். ஏனென்றால் நீங்கள் அதைக் கையாளவில்லை என்றால். இந்த இரண்டு அமைச்சுக்களும் இலங்கை அரசின் சட்டபூர்வமான தன்மையைக் கேள்விக்குள்ளாக்க தொடர்ந்து எங்களை தூண்டும் மிக முக்கியமானவை என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்
























