ந.லோகதயாளன்.
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட கிராமசேவகருடன் முறைகேடாக நடந்த ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது கிளிநொச்சியிலும் ஏற்பட்ட பாதிப்பினால் பரந்தன் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த இடைத் தங்கல் முகாமில் 28ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றைய தினம் கிராமசேவகர் பணியில் இருந்துள்ளார். இதன்போது தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியில. சமைத்த உணவை பாசலாக எடுத்து வந்து விநியோகிக்க முற்பட்டபோது முகாமில் தங்கியிருக்கும் மக்களிற்கு முகாமில் சமைத்த அல்லது பொதுச் சுகாதார உத்தியோகத்தர் பரிசோதணை மேற்கொண்ட உணவை மட்டுமே வழங்க முடியும் என்பதே அரச ஏற்பாடு அவ்வாறு இல்லையேல் நீங்கள் பிரதேச செயலாளரையே அனுக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
கிராமசேவகரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் கிராமசேவகருடன் வாய்த்தரக்கம் ஏற்பட்டு உணவுப் பாசலை விநியோகம் செய்தபோது கிராம சேவகர் தடுக்க முற்பட்ட சமயம் கிராம சேவகரின் வயிற்றில் நாடாளுமன்ற உறுப்பினர் குத்தியுள்ளார். இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற கிராம சேவகர் பொலிஸிலும் முறையிட்டுள்ளார்.
இவ்வாறு கிராமசேவகரை தாக்கி அங்கிருந்து வெளியேற முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை முகாமில் இருந்த மக்கள் தடுக்க முற்பட்டபோதும் வாகனத்தை நிறுத்தாமல. சென்றதனால் வாகனத்தின் பக்க கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அறிந்த மாவட்ட கிராமசேவகர்கள் உடனடியாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட முற்பட்டபோது மாவட்ட அரச அதிபரின் வேண்டுகோளின் பெயரில் அணர்த்த காலத்தை கருத்தில்கொண்டு பணிப் புறக்கணிப்பை கைவிட்டு குறித்த விடயம் அமைச்சர் சந்திரசேகரனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அமைச்சர் சந்திர சேகரன் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 29ம் திகதி சனிக்கிழமை அன்றைய தினம் நேரில் சென்று இது தொடர்பில் ஆராய்ந்ததோடு கிராமசேவகர்களுடனும் கலந்துரையாடி இப்படியான செயலை எமது கட்சி அனுமதிப்பதில்லை எனப் பதிலளித்துள்ளார்
























