பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை பேசியதாவது; “பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்” என்றார். இதற்கிடையே, திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு சுமூகமாக நடைபெற்று வருவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.
























