இயக்குனர் சீமான் எழுதி இயக்கிய ‘தம்பி’ திரைப்படமும் தற்போது மறு வெளியீடு பட்டியலில் இணைந்துள்ளது. நடிகர் மாதவன் நடித்த இந்த படம், முதலில் 2006ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் பூஜா, வடிவேலு, மணிவண்ணன், பிஜு மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், ‘தம்பி’ திரைப்படத்தின் மறு-வெளியீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படம் வருகிற ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது.






















