விஜய ஆண்டனி நடித்துள்ள “நூறு சாமி” படம் நீண்ட காலத்திற்கு நம் நினைவில் நிலைத்திருக்குமென பிரபல இயக்குநர் ஏர்ஆர்முருகதாஸ் கூறியுள்ளார். இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் திரையரங்கு வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற ஜூன் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் முன்னோட்டம், முன்னறிவிப்புக் காட்சி மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ‘நூறு சாமி’ திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். அதாவது, “மனதைத் தொடும் வகையிலான, உணர்வுபூர்வமான கதை இது; நீண்ட காலத்திற்கு நம் நினைவில் நிலைத்திருக்கக்கூடியது. இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால், இன்னும் சிறப்பானதாக அமைந்தது. இதை நான் மிகவும் ரசித்துப்பார்த்தேன்; நிச்சயம் பார்வையாளர்களும் இதனுடன் ஒன்றிப்போய் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.






















