குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பதவியை இழந்த வவுனியா மாநகர முதல்வர் சபையின் செங்கோலை எடுத்துச் சென்று இன்னுமொரு குற்றம் புரிந்தவராக அடையாளம் காணப்பட்டார். இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில்ல முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாநகர சபையில் இருந்த அரச சொத்தை மாநகர சபையில் இருந்து பதவி நீக்கப்பட்ட முதல்வரே எந்தவொரு அனுமதியும் இன்றி எடுத்துச் சென்றுள்ளார் என ஆணையாளர் தரப்பால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடக்கின் இரண்டாவது மாநகர சபையாக தற்போது தரம் உயர்த்தப்பட்ட வவுனியா மாநகர சபை யாழ்ப்பாணம் மாநகர சபையில் காணப்படும் செங்கோலை ஒத்த வடிவத்தில் ஓர் செங்கோலை தயார் செய்திருந்தனர். அவ்வாறு செய்யப்பட்ட செங்கோலே முன்னாள் முதல்வரால் எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் கடந்த 23 ஆம் திகதிய அமர்வின்போது செங்கோல் சேதமடைந்த காரணத்தினாலேயே அதனை எடுத்துச் சென்றதாக முன்னாள் முதல்வரால் பதிலளிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் இவ் விடயம் நாளை புதன் கிழமை வவுனியாப் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

















