இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் பிரிட்டன் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். பிரிட்டனில் கடந்த 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக பதவியேற்றார். 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பதவியேற்ற ஸ்டார்மர் கடந்த 2 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டார்மர் கடந்த ஜூன் 22-ம் தேதி அறிவித்தார். இதையடுத்து நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராகவும் பிரதமராகவும் 56 வயதான ஆன்டி பர்ன்ஹாம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கெய்ர் ஸ்டார்மர் மன்னர் சார்லஸை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். இதையடுத்து புதிய அரசை அமைக்குமாறு மன்னர் சார்லஸ் விடுத்த அழைப்பை பர்ன்ஹாம் முறைப்படி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் பிரிட்டனின் 59-வது பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவியேற்றுக் கொண்டார். புதிய பிரதமரின் கேபினட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் இடம்பெற்றுள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த களிஷ்கா நாராயண், 36, மற்றும் விசா நந்தி, 46, பிரிட்டனின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். ஐரோப்பிய நாடான நாராயண லிசாநந்தி பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பர்ஹம் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது புதிய கேபினட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனிஷ்கா நாராயண், லீசாமந் ஆகிய இருவருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பீகாரின் முசாபர்பூரில் பிறந்த கனிஷ்கா நாள்யண், தன் 12-வது வயதில் பிரிட்டனின் கார்டிட் நகருக்கு பெற்றோருடன் குடிபெயர்ந்தவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதார படிப்பு முடித்தவர். இவர் பிரிட்டனின் முதல், செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். முந்தைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமைச்சரவையில் கலாசாரத் துறை அமைச்சராக பணியாற்றிய லிசா நந்தி, புதிய அமைச்சரவையிலும் அதே பொறுப்பில் நீடிக்கிறார். மான்செஸ்டரில் பிறந்த லிசா நந்தியின் தந்தை தீபக் நந்தி, மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவைச் சேர்ந்தவர்.


















