எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘தேசிய வளங்கள் நிர்வாகம்’ அமைதி, பாதுகாப்பு, வளத்துக்கான அடித்தளம்’ என்ற தலைப்பில் உயர்மட்ட விவாதம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி இப்திகார் அகமது, இந்தியா சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்தி தண்ணீரை ஆயுதமாக்குவதாக குற்றம் சாட்டினார். இந்த நடவடிக்கையால் பாகிஸ்தானின் சுமார் 24 கோடி பேரின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக கூறிய அவர், இது சட்ட விரோதமானது என் றும் தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பேசிய இந்திய பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அரசு கொள்கையின் ஒரு கருவியாக வைத்திருப்பவர்கள், சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தின் கீழ் ஒத்துழைப்பை எதிர்பார்க்கக்கூடாது என்று கூறினார். மேலும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருந்து வருவதாக கூறிய அவர், அது எப்போதும் தொடரும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.
















