அமெரிக்காவில் காதலியை கொன்ற இந்திய மாணவனை ஜெர்மனியில் கைது செய்தனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த வருண் பட்சிகரி (வயது 20) என்ற இளைஞர் பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கு ஜுலிசா ருபி சலசிர் (வயது 19) என்ற இருந்தார். இதனிடையே, வருணுக்கும் அவரது காதலிக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி டியுசன் நகரில் ஜுலிசா தங்கி இருந்த வீட்டிற்கு சென்ற வருண் காதலியிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில் காதலி ஜுலிசாவை வருண் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், டியுசன் விமான நிலையம் சென்ற வருண் அங்கிருந்து ஜெர்மனி சென்றார். அவர் ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அதேவேளை, ஜுலிசா கொலை செய்யப்பட்டது குறித்து தகவலறிந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறை, வருண் ஜெர்மனி வழியாக இந்தியாவுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டதை அறிந்தனர். இதையடுத்து, உடனடியாக ஜெர்மனி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு செல்ல ஜெர்மனி விமான நிலையத்தில் இருந்த வருணை ஜெர்மனி காவல்துறை கைது செய்தனர்.















