தமிழர் நிறுவனமான RemitBee நிதி நிறுவன தலைவர் பிரதீபன் யோகநாதன் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ரொறன்ரோவில் சந்திக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றார்

கனடாவைத் தலைமை அலுவலகத்தைக் கொண்டும் உலகின் பல நாடுகளில் கிளைகளைக் கொண்டும் தமிழர் நிர்வாகத்தில் இயங்கும் RemitBee நிதி நிறுவன தலைவர் பிரதீபன் யோகநாதன் அவர்கள் இன்று 27ம் திகதி வியாழக்கிழமை காலை ரொறன்ரோ மாநகரில் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ரொறன்ரோவில் சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளார்.
ரொறன்ரொவில் இயங்கும் கனடாவிற்கான இந்திய துணைத்தூதுவர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தோ-கனடா வர்த்தக சம்மேளனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பிரதீபன் யோகநாதன் அவர்களும் முக்கிய வர்த்தகப் பிரமுகர்களில் ஒருவரான கலந்து கொண்டார்.
உலகெங்கும் பணமாற்றுச் சேவை மற்றும் பல நிதிச் சேவைகளை வழங்கும் RemitBee நிதி நிறுவனம் கனடாவில் மிசிசாகாவில் இயங்கும் ‘தாமோர் நகை மாளிகை’ மற்றும் இங்கு 3 கிளைகளைக் கொண்டியங்கும் ‘தாமோர் பணமாற்றுச சேவை’நிறுவனம் ஆகியவற்றின் சகோதர நிறுவனம் என்பது இங்கு குறிப்பிட த்தக்கது. பிரதீபன் யோகநாதன் அவர்களை வாழ்த்த விரும்புவோர் pratheepan@remitbee.com என்னும் மின்னஞ்சலுக்கு அவற்றை அனுப்பலாம்.















