‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படத்தின் ‘கொஞ்சி கொஞ்சி’ எனும் முதல் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜெயனுடன் சோனா ஒலிக்கல் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்சுமி, பிரகதீஸ்வரன் பூபாலம், இந்துமதி, ரேஷ்மி, ராஜிந்த், ராம்குமார், மீனா, திலகவதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய வாரிசு நடிப்பில் களம் இறங்குவதால், இந்த ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இப்போதே தொடங்கியுள்ளது. இளையராஜாவின் இசைப்பயணம் மற்றும் அவரது பாடல்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் புரொட்யூசராக இணைந்திருப்பது படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு காணொளி வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில், ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படத்தின் ‘கொஞ்சி கொஞ்சி’ எனும் முதல் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.
















