குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் சந்தித்தார். பாஜக தேசிய தலைவர் நிதின் நபின். இவர் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்ற நிதின் நபின் குடியரசு தலைவர் முர்முவை சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக நிதின் நபின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிதின் நபின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை இன்று நான் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரின் இயல்பான நடத்தை மற்றும் நாட்டுக்கு சேவை செய்வதில் உள்ள உறுதியான அர்ப்பணிப்பு நமக்கு பெரும் பாடங்களை கற்பிக்கின்றன. குடியரசு தலைவரின் வழிகாட்டுதல் நாட்டுக்கும் சமூகத்திற்கும் உயர்வு ஏற்படுத்த தொடர்ந்து உழைக்க நமக்கு புது ஆற்றலையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.
















