இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா இருவரும் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 74,048 வாக்குகளும், சத்தியபாமா 66,841 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சத்தியபாமா ஆகியோர் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பதவியேற்பின் போது அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதையடுத்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா இருவரும் முதல்-அமைச்சர் விஜய்யை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தனர். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்.
















