போப் லியோ விரைவில் குணமடைந்து, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். கிறிஸ்தவ மத தலைவர் 14-வது போப் லியோவுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்து பிரதமர் நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது: 14-வது போப் லியோவுக்கு நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவர் மிக விரைவில் முழுமையாக குணமடைந்து, நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.” இவ்வாறு பிரதமர் மோடி தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.
















