கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் ஆறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கான பார்வையாளர் அரங்கு மற்றும் நடைபாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 15ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் 15.10.2026 நடைபெற்றது.
கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் குறித்த அடிக்கல் நாட்டும நிகழ்வு பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது
குறித்த நிகழ்வில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் மருங்கன் மோகன், வலய கல்வி பணிப்பாளர், கல்லூரி முதல்வர் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட கடத் தொழில் அமைச்சர் இராமலிங்கம்ங சந்திரசேகரன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கல்வியின் நிலை மற்றும் சீர்திருத்தம்: கல்வி பின்தங்கிய நிலைக்குச் சென்றுள்ளது. அதனால்தான் கல்வித் திட்டத்தை மேம்படுத்தி மாணவர்களைப் போட்டி நிறைந்த உலகத்தில் சுயாதீனமாக இயங்க வைக்கும் நோக்கில் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன
கலாச்சாரம், வறுமை மற்றும் கல்வியறிவு குறைபாடுள்ள இடங்களில் கலாச்சாரம் மற்றும் சீரழிவுகள் ஏற்படுகிறது. மேலும், போதைப்பொருள் பழக்கம் மற்றும் மதுபான சாலைகளின் அதிகரிப்பு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி, பெண் பிள்ளைகள் நகர் பகுதிகளுக்கு வந்து கல்வி கற்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. அவற்றைச் சீர்செய்யும் வகையில் பள்ளிகளை மேம்படுத்தி, ஆசிரியர்களுக்குப் போதுமான சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இளைஞர்களின் மனநலம் மற்றும் தற்கொலைகள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக மாணவிகள் மத்தியில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதற்கு சமூக வலைதளங்களின் தவறான பயன்பாடும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது என மேலும் அவர் தெரிவித்தார்.















