லியோ சிவக்குமார், பிரிகிடா, ராதிகா உள்ளிட்டோர் நடித்த ‘டெலிவரி பாய்’ படத்தின் ‘செங்காத்தியே’ பாடல் வெளியாகியுள்ளது. சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நானி, ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார். இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். ‘டெலிவரி பாய்’ திரைப்படம் அக்டோபர் 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை சிம்பு வெளியிட்டார். இப்படத்தின் முன்னோட்டம், குடும்ப உணர்வுகள், காதல், ஆக்ஷன், நகைச்சுவை என பல அம்சங்களைக் கலந்து வழங்கும் ஒரு கமர்ஷியல் படத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் அக்டோபர் 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
















