பு.கஜிந்தன்
19ம் திகதி திங்கட்கிழமை இரவு சுன்னாகம் தெற்கு, கல்லாக்காட்டுவான் பகுதியில் 1.800 கிராம் ஹெரோயினுடன் 29 வயதுடைய குடும்பப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட பெண், சான்றுப் பொருட்களுடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















