இசையமைப்பாளர் மறைந்த தேவாவின் சகோதரர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 37.
கார்த்திக் சபேஷ் ‘வல்லவன்’, ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100 டிகிரி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் கார்த்திக் சபேஷின் மறைவுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
















