பிரான்சில் வெடித்த வன்முறை காரணமாக பாதிக்கப்பட்ட பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் கல்வி முறையில் சீர்திருத்தங்களை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்வி நடைமுறையில் மாற்றம், ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்பறைகளில் அதிக மாணவர்கள் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை மற்றும் நீண்ட நேர வகுப்புகள் போன்ற குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி கடந்த மாதம் முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த போராட்டம் பெரும் வன்முறையாக மாறியுள்ள தால் பிரான்ஸ் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. கலவர சம்பவத்தை தொடர்ந்து உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடுமையான வன்முறைக் காட்சிகள் மற்றும் விரிவான சொத்து சேதங்கள் இருந்தபோதிலும், யாரும் கொல்லப்படவில்லை. அது ஒரு அதிசயம்” என்று கூறினார். மேலும், வன்முறைக் குழுக்களை எதிர்கொண்ட காவல்துறை சிறப்பாக பணியாற்றினர். நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், பிற பொதுக் கட்டிடங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்களைக் குறிவைத்து இந்த வார இறுதியில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து, மேலும் கலவரங்கள் மற்றும் கொள்ளையைத் தடுப்பதற்காக, நகரங்களில் மிகவும் வரையறுக்கப்பட்ட மற்றும் பகுதிவாரியான ஊரடங்கு உத்தரவுகளை விதிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன் என்றார். பிரான்சில் வெடித்த வன்முறை காரணமாக, பாதிக்கப்பட்ட பதற்றமான பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பகுதிநேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தப்பட்டுள்ளது.
















