சுந்தர்.சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகை நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வெளியானது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் நயன்தாரா, ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். மேலும் குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.
















