ரீ லஹரி கிருஷ்ணாவின் தெய்வீக அருளாலும் ஆசீர்வாதத்தாலும், தென் கொரியாவில் ஒரு சிறப்புமிக்க, என்றும் நினைவில் நிற்கும் நிகழ்வு நடைபெற்றது. முதல் பன்னாட்டு இந்திய–தமிழ்–கொரிய மாநாடு மற்றும் தமிழ் கலை, இலக்கியத் திருவிழாவில் பங்கேற்க மனுஜோதி ஆசிரமத்திற்கு தென் கொரியா தமிழ்ச் சங்கம் அழைப்பு விடுத்தது. இதனை ஏற்று, மனுஜோதி ஆசிரமத்தின் சார்பாக மலேசியாவைச் சேர்ந்த பக்தர்கள் தென் கொரியாவிற்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு நடைபெற்ற சிறப்பு விழாவில் “ஆன்மீகப் பார்வையில் திருக்குறள்” நூலை வெளியிடும் பெருமையைப் பெற்றனர்.
மேலும் இவ்விழாவை, டாக்டர் வி.ஜி.சந்தோசம் இனைந்து நடத்தியதோடு, நமது நூலை வெளியிட்டு, தமது சிறப்பான ஆதரவையும் வழங்கியது எங்களுக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
மனுஜோதி ஆசிரமத்தின் சேவைகளைப் பாராட்டி அங்கீகரிக்கும் வகையில், தென் கொரியா தமிழ்ச் சங்கத்தின் சார்பில், சிறந்த பொதுநல அமைப்பிற்கான விருது, நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவை திரு. தேவாசீர் இ. லாறி அவர்களுக்கு வழங்கப்பட்டன.
சர்வதேச எல்லைகளைக் கடந்து, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் தெய்வீகப் போதனைகளையும் ஞானத்தையும் உலகெங்கும் கொண்டு சேர்ப்பதற்கும், “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!” என்ற உன்னதக் கொள்கையைப் பரப்புவதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.



















