“கரும்புள்ளி கிராமம்” திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. விஎஸ் பிலிம் மேக்கர்ஸ் மற்றும் அணகா பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “கரும்புள்ளி கிராமம்”. இப்படத்தை ராசா ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை எஸ். ஜெயபாலா மற்றும் ஜி. சுகன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் மாஸ்டர் திரேஷ், யோகிபாபு, சுவேதா டோராத்தி, வாழை ஜானகி, பழ. கருப்பையா, சுப்ரமணி சிவா, கவிதா ரவி, ஜெய்பிம் மொசக்குட்டி, முப்பூசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தணிக்கைக் குழுவினரின் பார்வைக்குப் பிறகு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சமூகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாகியுள்ள இப்படம், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று இயக்குநர் ராசா ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இத் திரைபடம் தற்போது வெளியீட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. “கரும்புள்ளி கிராமம்” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.



















