(12-09-2021)
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக குடிநீர் பாவணைக்கான கட்டணங்கள் செலுத்தும் வீதம் 60 சத வீதமாக ஆக குறைந்துள்ளது.
இதனால் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் சபை எதிர்காலத்தில் கடும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதுடன் எதிர்காலத்தில் சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு முடியுமான வகையில் குடிநீர் பாவனைக் கட்டணத்தை செலுத்துமாறு வேண்டுகோள் விடுப்பதுடன், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பொதுமக்கள் கட்டணங்களை செலுத்தவதை கட்டாயப்படுத்துவதற்கு எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரு சிலர் மாத்திரமே ஒன்லைன் மூலமாக கட்டணங்களை செலுத்தி வருவதுடன், ஏனையோர் கட்டணங்கள் செலுத்துவதை தாமதித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நீர் பாவனையாளர்களிடமிருந்து கட்டணங்களை அறிவிடுவதற்கான வழிகாட்டல் முறைமையொன்றை நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேச நாணாயக்கார சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்மை குறிப்பிடத்தக்கது.