(27-10-2021)
கொழும்பு – முல்லேரியா பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பொலிஸ் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு சம்பவம் நடந்த வீட்டிற்குள் வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணிக்கும் காட்சிகள் அருகில் உள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
மேலும், போதைப்பொருள் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தில் 42 வயதுடைய தன்திரிகே நுவன் என்பவரே கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.