(28-10-2021)
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் நேற்று வியாழக்கிழமையன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர் .
கோவிட் 19 சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .
கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1696 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் இடம் பெறும் கொட்டகைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.