மன்னார் நிருபர்
(22/02/2022 )
மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்திற்கு புதிய உத்தியோகபூர்வ அலுவலகம் இன்று (22) காலை மன்னார் மாவட்ட செயலாளரும், மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவருமான திருமதி.ஏ.ஸ்ரான்லி டிமெல், தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது

குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப், மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தின் தவிசாளர், மன்னார் சாரணர் சங்க மாவட்ட ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் குறித்த அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வை தொடர்ந்து சாரணர் இயக்கத்தின் தலைவர் பேடன் பவல் அவர்களின் 165 வது பிறந்த தினத்தையொட்டி குறித்த அலுவலகத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
























