“நான் குடும்ப அரசியலுக்கு எதிரானவள், ஏனைய எனது குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் இல்லாத சூழ்நிலையில்தான் நான் முன்னர் தேர்தலில் போட்டியிட்டேன்.
எனது அம்மா ஶ்ரீமாவும் அரசியலிலிருந்து ஒதுங்குவேன் என்ற உறுதிமொழியை எனக்கு பல தடவைகள் வழங்கியிருந்தார். குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு என்பதால்தான் எனது மகனைக் கூட அரசியலில் பிரவேசிக்க விடவில்லை.
இந்த விடயம் கோட்டாபய ராஜபக்சவால் முடியாது. எனவே, அவர் கௌரவமாகப் பதவி விலக வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும்.” என இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார பெண் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தி உள்ளது உலக நாடுகளின் தலைவர்களின் காதுகளுக்கும் எட்டியுள்ளதாக கொழும்பில் உள்ள சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், சந்திரிகா அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ராஜபக்ச குடும்பமும் அரசியலிலிருந்து விரைவாக ஒதுங்க வேண்டும் எனவும் அவர் மிகவும் அழுத்தமாகத் தெரிவித்தார்.